அதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ,’சிசோடியாவுக்கு எதிரான வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்குதல் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டின் மீதான வாதங்கள் தொடங்கும்’ என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள்,’ நாங்கள் கேட்பது குற்றச்சாட்டு மீதான வாதங்கள் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை. அவை எப்போது தொடங்கும்? நாளைக்குள் (செவ்வாய்கிழமை) சொல்லுங்கள்’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
The post டெல்லி கலால் கொள்கை வழக்கு சிசோடியாவை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது: அமலாக்கத்துறை, சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.