×

பாதுகாப்புக்குத்தான் ஒன்றிய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவா விமான நிலையத்தில் மத்திய தொழில்படை வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாதுகாப்புக்குத்தான் ஒன்றிய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU ,Minister ,Udayaniti Stalin ,Chennai ,Minister Assistant Secretary ,Stalin ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...