சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு : அதிகபட்சமாக மணலியில் 322ஆக பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பால் சென்னையில் 3வது நாளாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. காற்றின் தரம் குறைந்ததன் காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிகை கொடுக்கப்பட்டுள்ளது சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 322 என்ற தரக் குறியீட்டை தாண்டி மிக மோசமான அளவில் காற்று மாசு உள்ளதாகவும், வேளச்சேரி 308, அரும்பாக்கத்தில் 256, ஆலந்தூர் 256, ராயபுரம் 232, கொடுங்கையூரில் 126 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது; கும்மிடிப்பூண்டி 241, வேலூரில் 230, கடலூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது

காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் என்றும் 201-300 அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இதய நோய் உள்ளவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு : அதிகபட்சமாக மணலியில் 322ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: