விரைவில் அறிவிப்பு வெளியிட முடிவு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்

சென்னை: சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு முறையில் முக்கியமாக சில மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2024ம் ஆண்டு பொதுத் தேர்வுத் தேதிகள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் ஒவ்ெவாரு ஆண்டும் வெளியிடுவதால் மாணவர்கள் இணைய தளத்தில் இருந்தே தேதிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள், திட்டம் மற்றும் அகமதிப்பீடு ஆகியவை 2024ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், குளிர்காலத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை, திட்டம் மற்றும் அகமதிப்பீட்டு தேர்வுகள் 2023 நவம்பர் 14ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதிக்குள் முன்கூட்டியே முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவதால், மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வு முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரவும் பாடப்பகுதிகளை குறைக்கவும் திட்டம் உள்ளதாக தெரிகிறது. தேர்வு முறையில் சில முக்கியமான மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மதிப்பெண் போடுவதிலும் மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொருத்தவரையில் 50 சதவீத கேள்விகள் போட்டித் தேர்வு அடிப்படையில் இருக்கும் என்றும் 12ம் வகுப்பு தேர்வில் இடம்பெறும் கேள்வித்தாளில் 40 சதவீத கேள்விகள் போட்டித் தேர்வுக்கான கேள்விகளை அடிப்படையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் திறன்களை சோதிக்கும் வகையிலான கேள்விகள் அதிக அளவில் பொதுத் தேர்வில் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 15 முதல் 35 கேள்விகளுக்கு 3 மணி நேரத்தில் விடை எழுத வேண்டிய நிலை ஏற்படும்.

The post விரைவில் அறிவிப்பு வெளியிட முடிவு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: