ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு!

சென்னை: ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசன் இன்றுடன் முடிவடைகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த மே மாதம் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 2000 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

இதேபோல் தங்களது வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனிடையே அக்டோபர் 07ம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவகாசன் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளூமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் 96% மேல் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

The post ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: