×

ரூ.89.29 கோடியில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை: தேசிய பால் வள வாரியத்திடம் ஒப்படைப்பு

சென்னை: பால்வளத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ரூ.89.29 கோடி மதிப்பீட்டில் நிறுவும் பணியை தேசிய பால் வள வாரியத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதி அளித்து அரசால் 16.11.2023ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பால் கூட்டுறவுகளுக்கான பால் உள்கட்டமைப்பு திட்டச் செயல்பாட்டில் தேசிய பால்வள வாரியத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, “நாமக்கல்லில் 2 LLPD ஹைடெக் பால் பண்ணையை நிறுவுதல்” என்ற திட்டம் தேசிய பால்வள வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உயர்வு ஆகியவற்றை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நுகர்வோரின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்கும் பால் பதப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் மிகவும் அவசியமானது.

The post ரூ.89.29 கோடியில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை: தேசிய பால் வள வாரியத்திடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Crore ,National Dairy Board ,Chennai ,Secretary of ,Dairy ,Department ,Namakkal District Cooperative Milk Producers Union ,
× RELATED விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம்...