×

தெலங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம்: அமித் ஷா எச்சரிக்கை

ஐதராபாத்: ‘தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சிக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது. பிஆர்எஸ் ஆட்சியை அகற்றும் வரை பாஜவின் போராட்டம் ஓயாது’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தின் செவெல்லா பகுதியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:

தெலங்கானாவில் பாஜ ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். இங்கு, கடந்த 9 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடத்தி வரும் ஆளும் பிஆர்எஸ் (பாரத் ராஷ்டிர சமிதி) அரசின் கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது. யுள்ளது என்று ஷா கூறினார். பிஆர்எஸ் மற்றும் சந்திரசேகர் ராவுக்கு எதிரான மக்கள் கோபத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்ததும், ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இங்கு காவல்துறையும் நிர்வாகமும் முற்றிலும் அரசியலாக்கப்பட்டுள்ளது. பாஜ தொண்டர்களை சிறையில் தள்ளினால் பயப்படுவார்கள் என நினைக்கின்றனர். உங்கள் அட்டூழியங்களுக்கு பயப்பட மாட்டோம். உங்களை பதவியில் இருந்து அகற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

The post தெலங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம்: அமித் ஷா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Hyderabad ,Chandrasekhar Rao ,PRS ,Telangana ,BJP ,
× RELATED சொல்லிட்டாங்க…