×
Saravana Stores

சர்ச்சையான கில் விக்கெட் பந்து தரையில் பட்டுச்சு.. ஆனா படல: பாண்டிங் சொல்கிறார்

கில் 18 ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தார். அப்போது எட்ஜாகி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை விரல்கள் தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். கள நடுவர்கள் 3வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதுபற்றி ரிக்கி பாண்டிங் பேசியதாவது: “கிரீன் 6-8 இன்ச்கள் மேலே பிடித்துவிட்டார்.

ஆனால் பிடித்தபடியே கையை கீழே கொண்டு சென்றுவிட்டார். அதனால் கீழே பட்டது என்கிற வகையில் களத்தில் இருந்த நடுவரிடம் ரோகித் சர்மா விவாதித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் பந்து பிடிக்கப்பட்டுவிட்டது. இதனால் தான் கில் சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் இங்கு இருக்கும் சர்ச்சை எல்லாம், பிடிக்கப்பட்டபிறகு பந்து கீழே உரசியதா? என்பதுதான். நன்றாக பிடித்துவிட்டார் என்பதால் தான் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்திருக்கிறார். கீழே பட்டாலும் அடியில் கை இருந்ததால் தான் நடுவரும் அப்படி கொடுத்திருக்கலாம். மற்றவை எல்லாம் சர்ச்சைக்காக பேசப்படுபவை” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “3ம் நடுவர் முழித்துக்கொண்டு தான் இந்த முடிவை கொடுத்தாரா? இதே அந்த இடத்தில் கில்லுக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் இருந்திருந்தால் முடிவு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும்.” என சாடினார். ஆஸி., அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “இந்த முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது. 3ம் நடுவருக்கு பிரஷர் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் தான் களத்தில் கொடுக்கப்பட்ட முடிவையே கொடுத்துவிட்டரா? இது அவுட்டே இல்லையே.” என்றார். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் உள்ளிட்டோரும் 3வது நடுவரின்முடிவை கண்டித்துள்ளனர்.

The post சர்ச்சையான கில் விக்கெட் பந்து தரையில் பட்டுச்சு.. ஆனா படல: பாண்டிங் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Ana Padala ,Banding ,Kill ,Gill ,Scott Bolant ,Ana Phala ,Dinakaran ,
× RELATED டிரம்பை கொல்ல திட்டமிடவில்லை: அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான்