கோர்ட்டை அவமதித்த செபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: பங்கு சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியம்( செபி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்14ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க செபிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதானியின் பங்கு விலை கையாடல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மீறியதாக கூறி செபி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கோர்ட்டை அவமதித்த செபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: