கேளம்பாக்கத்தில் ரூ.17.16 லட்சத்தில் ரேஷன் கடை பேருந்து நிழற்குடை கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் ரூ.17.16 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, பேருந்து நிழற்குடை கட்டும் பணிக்கு, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி அடிக்கல் நாட்டினார். திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் ரேஷன் கடை மற்றும் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையின்படி, திருப்போரூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கேளம்பாக்கத்தில் ரூ.11.16 லட்சம் செலவில் புதிய ரேஷன் விலைக்கடை மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எல்.இதயவர்மன் முன்னிலை வகித்தார்.

விழாவில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு புதிய ரேஷன் விலைக்கடை மற்றும் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கேளம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கேளம்பாக்கத்தில் ரூ.17.16 லட்சத்தில் ரேஷன் கடை பேருந்து நிழற்குடை கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: