×

ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர படேலின் பேரன் கடத்தல்: 21 மணி நேரத்தில் மீட்பு: 3 பேர் கைது

ரைசன்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேவேந்திர படேல் மத்தியபிரதேச சில்வானி பேரவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இவரது மருமகன் யோகேந்திர படேல். யோகேந்திர படேலின் 2 வயது குழந்தை நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.

பின்னர் எம்எல்ஏவின் மருமகன் யோகேந்திர படேலை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் குழந்தையை விடுவிக்க வேண்டுமெனில் 1.5 கிலோ தங்கம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரை விசாரித்த போலீசார் கடத்தப்பட்ட 21 மணி நேரத்தில், நேற்று சிந்த்வாரா மாவட்டம் தாமியா பகுதியில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.குழந்தையை கடத்திய உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர படேலின் பேரன் கடத்தல்: 21 மணி நேரத்தில் மீட்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Congress ,MLA ,Devendra Patel ,Silvani Assembly ,Madhya Pradesh ,Yogendra Patel ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...