கக்கன் திரைப்படத்திற்கு வரி விலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பாராட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தியாக சீலர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து திரையிடப்பட்ட கக்கன் படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலன், உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கக்கன் வகித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது.

இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் வரிவிலக்கு அளித்த சமூகநீதிக் காவலர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post கக்கன் திரைப்படத்திற்கு வரி விலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: