அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை ஏன் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு. தற்போது வக்பு வாரிய துறைக்கு செஞ்சி மஸ்தான் அமைச்சராக இருக்கிறார். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜவை வளர்த்து விடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் வகுப்புவாத கலவரங்கள் மூலம் பாஜவை வளர்க்கலாம் என்ற மோடியின் கனவு நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு appeared first on Dinakaran.