சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்

*கூண்டு பொறுத்தப்பட்டு தண்ணீர் விடவும்

*நடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை : சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலை ஓரங்களில், வனத்துறையின் சார்பில், பசுமை தமிழ்நாடு நாள் 2024 முன்னிட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின்கீழ், மரக்கன்றுகள் நடும் விழாவில், மாவட்ட கலெக்டர் அருணா, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை பசுமை மிகுந்த மாநிலமாக மாற்றிடும் வகையில் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மாவட்டங்கள் தோறும் மரக்கன்றுகளை நடுதல், மரக்கன்றுகள் நடுவதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு, புதுக்கோட்டை முதல் தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 5,000 நிழல்தரும் உள்ளர்.

இன மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும்போது வெட்டப்படும் ஒரு மரக்கன்றுக்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடவு செய்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின்படி, புதுக்கோட்டை முதல் தஞ்சாவூர் செல்லும் சாலையில் 5,000 மரக்கன்றுகள் நடவு செய்திட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் வனத்துறையினை கோரப்பட்டதை தொடர்ந்து, பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் மூலம் உள்ளூர் அமர வகையான புங்கன், வேம்பு, இலுப்பை, நாவல், ஆயா, புளி, நீர்மருது, தூங்கு மூஞ்சி வாகை போன்ற மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு பொறுத்தப்பட்டு தண்ணீர் விடப்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிடும் வகையில், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை பேராசிரியர் டாக்டர் சரவணன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: