சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
1. யானைகவுனி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 நபர்கள் கைது. 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னை, செளகார்பேட்டை, PKG முதல் லேன் என்ற முகவரியில் வசித்து வரும் உதயகுமார், த/பெ.சந்தானம் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து மேற்படி உதயகுமார் கடந்த 18.03.2023 அன்று C-2 யானைகவுணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R. சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S. பாஸ்கரன், C-2 யானைகவுனி காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.E. பாரதிதாசன், (த.கா.21227), திரு. அன்பரசு (த.கா.27474), B-3 கோட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.S. முகமது (மு.நி.கா,43394) C-3 ஏழுகிணறு காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.M. நௌசத்பாஷா, (மு.நி.கா 38985) ஆகியோர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிய  1. விஷ்ணுவர்தன், வ/29, த/பெ.மோகன் பாபு, ராயபுரம், சென்னை 2. ரிதிஷ்குமார், வ/35, த/பெ.கோபிநாத், எருக்கஞ்சேரி, சென்னை 3. வெங்கடேஷ், வ/37, த/பெ.குமார், அரியூர்குப்பம், வேலூர் மாவட்டம் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. எம்.கே.பி நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது, 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லோடு வாகனம் பறிமுதல். P-5 MKB நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G. தீபன் என்பவர் கடந்த 18.05.2023 அன்று வியாசர்பாடி, எம்.ஜி.ஆர் நகர் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, லோடு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்த, பிரசன்னா, வ/20, த/பெ. திவாகரன், எம்.ஜி.ஆர் நகர், வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக் குப்பின்னர் கைது செய்யப்பட்ட பிரசன்னா உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (CSCID) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
3. ஆர்.கே.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த 2 இளஞ்சிறார்கள் பிடிப்பட்டனர். 1 இருசக்கர வாகனம் பறிமுதல். H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S. செந்தில்வேல், காவலர் திரு.A. கோகுலன் (கா.எண்.52434) ஆகிய இருவரும் கடந்த 17.05.2023 அன்று அதிகாலை 2.00 மணியளவில் ஆர்.கே.நகர், ராஜசேகரன் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்ய முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். உடனே மேற்படி போலீசார் இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று இருசக்கர வாகனத்தில் தப்பிய ஓருவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் 17 வயது இளஞ்சிறார் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 திருட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு இளஞ்சிறாரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் ஆர்.கே.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்தது.
4.அமைந்தகரை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது.  8.4 கிலோ கஞ்சா பறிமுதல். k-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.B.சிவராமன் (த.கா.36731),  K-8 அரும்பாக்கம் காவல் நிலைய  தலைமைக்காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி, (த.கா.36523), K-4 அண்ணாநகர் காவல் நிலைய காவலர் திரு.D.அன்பு, (கா.எண்48597) K-3  அமைந்தகரை காவல் நிலைய காவலர் திரு. R.ராஜேஷ் (கா.எண்.56900) ஆகியோர் கடந்த 18.05.2023 காலை, அமைந்தகரை, சுப்புராயன் தெருவில் கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1.வினோத்ராஜா (எ) சென்டட்ரல் ராஜா, வ/37, த/பெ.முருகேசன், பள்ளிக்கரணை, சென்னை 2.நரேஷ்குமார், வ/27, த/பெ.பத்மநாபன், எண்ணூர், சென்னை 3.நாகூர், வ/22, த/பெ.உசேன் அலி, மதுரவாயல், சென்னை 4.ரிஷிகேஷ், வ/22, த/பெ.விஜயன், சர்புதின் தெரு, சூளைமேடு, சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
5. மாதவரம் பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறித்த குற்றவாளியை Data Entry Assistant பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். M-1 மாதவரம் காவல் நிலையத்தில் Data Entry Assistantயாக பணிபுரிந்து வரும் திரு.P.பிரகாஷ் என்பவர் மூலக்கடை, பெட்ரோல் பங்க் அருகே கடந்த 20.05.2023 நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.  இதனை கவனித்த மேற்படி பிரகாஷ் துணிச்சலுடன் மேற்படி செல்போன் பறித்த நபரை துரத்திச்சென்று பிடித்து M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர் சஞ்சய், வ/21, த/பெ.பிரபாகரன், MPM தெரு, வியாசர்பாடி, சென்னை என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (29.05.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

The post சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: