மழைநீர் வடிகால் பணிகளை கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் – பொழிச்சலூர் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதன்படி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கம் பகுதியில் மூடு கால்வாய் பணி, கெருகம்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி, கொளப்பாக்கம் – பொழிச்சலூர் சாலையில் உள்ள ஓமேகா பள்ளி அருகில் மூடிய வடிவிலான கால்வாய் அமைப்பு உள்ளிட்ட பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், பருவ மழைக்கு முன்பாகவும் விரைந்து முடிக்கவும் உத்திரவிட்டார்.

The post மழைநீர் வடிகால் பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: