×

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 38.67 அடியாக உயர்வு..!!

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, கிராம ஊராட்சிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்திற்குள்ளாகவே 27.5 அடி உயர்ந்துள்ளது. நேற்று பொழிந்த அடைமழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் என்பது 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக இருந்த நிலையில் தற்போது இன்று காலை நிலவரப்படி 38.67 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றையதினம் 4 அடி உயர்ந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்துள்ளது.

மழை பொழிவை பொறுத்தவரையில் சிறுவாணி அணைகட்டுப்பகுதிகளில் சீராக மழை பொழிந்து வருவதன் காரணமாக நீர்மட்டம் உயந்து கொண்டு வருகிறது. குறிப்பாக அணைக்கட்டு பகுதியில் 9 செ.மீ மழையும், அடிவாரத்தில் 7 செ.மீ மழையும் மொழிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி சிறுவாணி அணை நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த நிலையில் இன்று 38.6 அடியாக உயர்ந்துள்ளது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை அடுத்த வாரத்திற்குள் சிறுவாணி அணை எட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 38.67 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Siruvani Dam ,Coimbatore ,Western Ghats ,
× RELATED தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2...