×

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை: கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள “டிரான்ஸ்பார்மரில்” அமர்ந்த காக்கை ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதை கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காக்கையை எடுத்து இதயத் துடிப்பை வர வைக்க சி.பி.ஆர் கொடுத்து, அதன் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது.

இதை அடுத்து அதனை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிழலில் விட்டனர். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய காக்கை அங்கு இருந்து பறந்து சென்றது. சி.பி.ஆர் செய்து காக்கையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளைதுரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : KOWAI ,COUNTAMPALAYAM FIRE STATION ,R ,
× RELATED கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ்...