தடாகம் பகுதியில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை அரசு தக்க வைக்க வேண்டும். கோவையில் 50 விழுக்காடு குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தொழில் கூடங்களுக்கு ஓராண்டில் இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின்கட்டணம், நிலைக்கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். அப்படி செய்தால் தான் தொழில் நடத்த முடியும். ஆளுநர் முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
மக்கள் நலன் கருதி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களை திருப்பி அனுப்ப ஆளுநர் தாமதப்படுத்த கூடாது. ஆளுநர், முதலமைச்சர் ஒன்றாக செயல்பட வேண்டும். ஆளுநர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்க கூடாது. ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை. செய்யாரில் சிப்காட் அமைக்க விளை நிலங்கள் எடுக்காமல் தரிசு நிலத்தில் சிப்காட் அமைக்க வேண்டும். சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை எடுப்பது தவறான முன்னுதாரணம் அமையும். தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். இந்தியாவில் 10 லட்சம் மருத்துவர்கள் தேவை. 20 லட்சம் செவிலியர்கள் தேவை. மருத்துவ தேவை என்பதை மக்கள் தொகை அடிப்படையில் எடுக்க கூடாது. அப்படி செய்தால் மருத்துவ கல்லூரிகள் குறைய வாய்ப்புள்ளது. இதனை கைவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும். 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு விரைவில் அறிவிப்போம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கோவை மாநகராட்சியில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.