கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் செயல்பட்டு வரும் கருவூல அலுவலகம் மேற்கூரையில் இருந்து வட மாநில நபர் ஒருவர் சட்டையின்றி, மாடியில் கிடந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு, கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது எரிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் கருவூல அலுவலகம் மேலே ஏறி அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர். அந்த வட மாநில நபர் அசாம் பகுதியை சேர்ந்த விகாஷ் எனவும் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படும் நிலையில் எவ்வாறு அவர் மேலே ஏறினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர் மாடியில் இருந்து கற்களை வீசியதில் பொதுமக்கள் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது அதே சமயம் அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பான சூழல் நிலவியது.

The post கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: