×

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல வேண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

சென்னை: இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவும் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் பிரதீர் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதத்தோடு முடிவடையும் நிலையில், இந்த முறை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் இன்று 10 – 20 மி.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளதால், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல வேண்டும். தூத்துக்குடியில் அடுத்த 3 – 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

The post கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல வேண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Pradeep John ,Chennai ,Indian Ocean ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...