அப்போது குளிர்சாதன பெட்டியில் இருந்து சாக்லேட் ஒன்றை எடுக்க முயன்ற சிறுமி மீது மின்சாரம் தாக்கியது. சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட உறவினர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.
The post சாக்லேட் எடுக்க பிரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்! appeared first on Dinakaran.