The post நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிடமாடலில் செயல்படுத்தி தமிழ்நாட்டைத் தலை நிமிர்த்தி வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.
நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிடமாடலில் செயல்படுத்தி தமிழ்நாட்டைத் தலை நிமிர்த்தி வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிடமாடலில் செயல்படுத்தி தமிழ்நாட்டைத் தலை நிமிர்த்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தாயாகக் கருணையையும் மனைவியாக உறுதுணையையும் மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் தாயுமானவராகத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம்.