முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாதவரத்தில் ரேக்ளா போட்டி

திருவொற்றியூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாதவரம் பகுதியில் ரேக்ளா ரேஸ் போட்டி நடத்தி பரிசு வழங்கினர். சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா போட்டி தீயம்பாக்கத்தில் நடத்தப்பட்டது.

இதற்கு பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமை வகித்தார். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முழுவதும் இருந்து சுமார் 71 பந்தைய மாடுகள் கலந்துகொண்டன. பெரிய கன்றுகள், சிறிய கன்றுகள் என்று தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் சிறிய மாடுகளுக்கு 4 கிலோ மீட்டர் தூரமும்பெரிய மாடுகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரத்திலும் பந்தயங்கள் நடத்தப்பட்டன. காளைகள் சீறி பாய்ந்த ஓடியது.

இது பொதுமக்களையும் பார்வையாளர்களையும் பரவசப்படுத்தின. இதையடுத்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுகளுக்கும் பரிசு கோப்பை, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜாராபர்ட், காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், தொகுதி பார்வையாளர் சந்திரபாபு, மிசா மதிவாணன், ஊராட்சி தலைவர் ராமு ஆகியோர் கலந்துகொண்டு பரிசு கோப்பை, ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர். இதில் வட்ட செயலாளர் கருணாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் அஜய் தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாதவரத்தில் ரேக்ளா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: