×

யார் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானிப்பாங்க… விஜய்க்கு ஓபிஎஸ் பதிலடி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவர், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்துறை சட்டப்படி செயல்படாமல் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். அதிமுக தொண்டர்களின் உரிமையை காக்க போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கட்சியிலும் தமிழக முதல்வராக தீர்மானம் நிறைவேற்றுவது வழக்கமானது. யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான். இவ்வாறு கூறினார்.

The post யார் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானிப்பாங்க… விஜய்க்கு ஓபிஎஸ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister… ,OPS ,Vijay ,Thiruppuvanam ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Madapuram ,Ajith Kumar ,Sivaganga district ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...