×

துறைவாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறை சார்பிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் கேட்டறிந்து அறிவுரைகளை வழங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post துறைவாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Muruganantham ,Chennai Secretariat ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...