புதுடெல்லி: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க 23 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதி குழுவின் தலைவராக முகமது அக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் மேலாண்மை குழுவின் தலைவராக சிவகுமார் தகாரியாவும், ஒருங்கிணைப்பாளராக ராம் கோபால் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக தனேந்தர் சாகுவும், திட்டமிடல் மற்றும் உத்திகள் வகுப்பதற்கான குழு தலைவராக தமராத்வாஜ் சாகு நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post சட்டீஸ்கர் பேரவை தேர்தல்: தேர்தல் வாக்குறுதிக்கு காங். குழு அமைப்பு appeared first on Dinakaran.