தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்தியபிரசேதம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சித்தாந்தத்திற்கு எதிரான எங்கள் போர் தொடரும். தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ‘பிரஜாலு தெலங்கானா’ என்ற வாக்குறுதியை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். இந்த நேரத்தில் கடினமாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில்,’ தெலுங்கானா மக்கள் வரலாற்றை உருவாக்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது மாநில மக்களின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தெலங்கானா மக்களுக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி. தெலங்கானாவில் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி பணியை வழங்கியுள்ளனர். மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறாம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
The post மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் மக்கள் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம் ஆனால்… சித்தாந்தப்போர் தொடரும்: ராகுல் கருத்து appeared first on Dinakaran.