சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு-ரூ.200, ஹேண்டி கேமரா-ரூ.350, கேமரா-ரூ.750, வாகனம் மூலம் பார்வையிட ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வை பூங்கா நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வந்தது..!! appeared first on Dinakaran.