×

சென்னை மெட்ரோ பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில்.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!!

சென்னை : சென்னை மெட்ரோ பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் நெரிசல் மிகு நேரம் இல்லாத (Non Peak Hours) மற்ற நேரங்களில், 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சென்னை மெட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதே சமயம் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் புதிய நடைமுறை ஒன்று அமலாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெரிசல் மிகு நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையும், அதேபோல மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 மற்றும் 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இரு பிரிவுகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தளநாளை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. பேடிஎம், வாட்ஸ் ஆப், ஃபோன் பே, ஸ்டடிக் கியூ ஆர் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி பொருந்தும்.

The post சென்னை மெட்ரோ பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில்.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!! appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Metro ,
× RELATED மடுவு நீர்வழிப் பாதையை...