சென்னை ஈசிஆரில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி, போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்ளாட்சி, மின்சாரம் மற்றும் மருத்துவ துறையிடம் அனுமதி பெறப்பட்டதா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும். விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணத்தினால் ரசிகர்களின் நலன் கருதி இசைநிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். இதனிடையே, சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்த நிலையில், மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர். உள்ளே, ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை. இதனால் ஆவேசத்தில் இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து வீடு திரும்பினர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
The post சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்..!! appeared first on Dinakaran.