×

சென்னை யானை கவுனியில் கட்டப்படும் பாலத்திற்கு இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: சென்னை யானை கவுனியில் கட்டப்படும் பாலத்திற்கு இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த ஜி.கே. மூப்பனார் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே சென்னை மாநகரில் அன்னை இந்திரா காந்திக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தாங்கள் இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னை யானை கவுனியில் கட்டப்படும் பாலத்திற்கு இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Yanai Gouni ,Chennai ,Indira Gandhi ,Tamil Nadu Congress Party ,Selvaperunthagai ,Indian ,Bharat Ratna ,
× RELATED சென்சார் கெடுபிடி எதிரொலி; கங்கனாவின் எமர்ஜென்சி நாளை ரிலீசாகவில்லை