சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பபதிவு முகாமை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சென்னையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.சென்னை மாநகராட்சி சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சமுதாய கூடத்தில் 3 ரேஷன் கடைகளுக்கான 6 முகாம்கள் நடைபெறுவதையும், தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பங்கள் பதிவு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு, மக்களிடம் கலந்துரையாடி அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்து அதன்படி விண்ணப்ப பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து, வார்டு-56, மண்ணடி, ஜீல்ஸ் தெருவில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு விண்ணப்பங்களை துல்லியமாக பதிவு செய்திடும்படியும் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

 

The post சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பபதிவு முகாமை தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: