×

சென்னை விமான நிலையத்திற்குள் மழை நீர் தேங்காமல் தடுக்க கால்வாய் கட்டும் பணியை தொடங்கியுள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்குள், விமான போக்குவரத்துக்கு இடையூறாக ஓடுபாதைகள் மற்றும் விமானங்கள் நிறுத்தும் இடங்களில், மழை நீர் தேங்காமல் தடுக்க விமான நிலைய வளாகத்திற்குள் 4.3 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் கட்டும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த கால்வாய் வழியாக மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் விதத்தில், கால்வாய் அமைக்கப்படுகிறது. சென்னை ஐஐடி நிபுணர்களின் ஆலோசனைகளின் பெயரில், இந்த மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்திற்குள் மழை நீர் தேங்காமல் தடுக்க கால்வாய் கட்டும் பணியை தொடங்கியுள்ளது இந்திய விமான நிலைய ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Airports Authority of India ,Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்