இதையடுத்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திரயான் – 3 செயற்கைக்கோள் தனது முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், ‘தற்போது 41762 கி.மீ x 173 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் – 3 செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. மேலும் செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருகிறது. அடுத்த 40 நாட்கள் தொடர் பயணத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான் – 3 செயற்கைக்கோள் நிலவை சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் – 3 செயற்கைக்கோள் சீராக செயல்படுகிறது!: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.