×

உதவி பொறியாளர், செயல் அளவையர் பதவிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 7ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய உதவிப் பொறியாளர், உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் செயல் அளவையர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வை கடந்த 14.10.2004 மற்றும் 23ம் தேதி வரை (கணினி வழி தேர்வு) 26.10.2024 (கொள்குறி வகை தேர்வு) ஆகிய நாட்களில் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இப் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 7ம் தேதி முதல் 8ம் தேதி வரை சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேர்வர்களின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தற்காலிக தேரவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

 

The post உதவி பொறியாளர், செயல் அளவையர் பதவிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 7ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Gopala Sundararaj ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!