×

போர் நிறுத்தம் முடிந்ததா? ராணுவம் விளக்கம்

ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல்கள் குறித்து ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாள் மோதலுக்கு பிறகு கடந்த 10ம் தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தம் தற்காலிமானது என்றும் அது நேற்றுடன் முடிவடைவதாக சில தகவல்கள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள பெயர் வெளியிடாத இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், ‘‘இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ) இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்தத்திற்கு எந்த காலாவதி தேதியும் இல்லை. எனவே இன்று (நேற்று) இந்தியா, பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்கள் இடையே எந்த பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை’’ என தெளிவுபடுத்தினார்.

The post போர் நிறுத்தம் முடிந்ததா? ராணுவம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Srinagar ,India ,Pakistan ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை