பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனின் தந்தை நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் குடிபோதையில் இருந்த பொழுது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்பொழுது அவர் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு பற்றி தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவராமன் பற்றியும் அவரது தந்தை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை முடிந்து ஜூலை 9-ஆம் தேதி வீடு திரும்பினார். சிவராமன் கைது நடவடிக்கைக்கு 2 நாட்களுக்கு முன் எலி பேஸ்ட் உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். சிவராமன் எலி மருந்து உட்கொண்டதை மருத்துவர்கள், மெடிக்கல் குறிப்பில் கூறியுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவராமன் தந்தை அசோக்குமார் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியானது! appeared first on Dinakaran.