மீஞ்சூர் பஜாரில் சிசிடிவி பழுதால் குற்றங்கள் அதிகரிப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: பொன்னேரி-திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் பஜார் பகுதி உள்ளது. இங்கு, திரையங்குகள், சுப்பர் மார்க்கெட்கள், நகை கடைகள், மளிகை கடைகள், ஹாட்டல்கள், வங்கிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இது நெடுஞ்சாலை பகுதி என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்வது வழக்கம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, வியாபாரிகள், காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இயங்கி வந்தன.

இதில், முக்கிய பகுதியான மீஞ்சூர் – பொன்னோரி – நெமிலிசேரி சாலை மற்றும் பஜார் பகுதியில் உள்ள சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு, நேரு சிலை சந்திப்பு, தேரடி தெரு, மீஞ்சூர் காவல் நிலையம் ஆகிய முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன. தற்போது, இந்த பகுதிகளில் சில கேமராக்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தும், உடைந்து தொங்கி கொண்டும் இருக்கின்றன.

இதற்கு முன்னர், வழிப்பறி, திருட்டு, கொள்ளை நடந்தால் இங்குள்ள சிசிடிவி பதிவுகளின் ஆதாரங்களை வைத்து கண்டு பிடித்தனர். ஆனால், கடந்த 6 மாதமாக சிசிடிவி பழுதடைந்து காணப்படுவதால், பல்வேறு வழக்குகள் தொடர்பான குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, உடனடியாக சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மீஞ்சூர் பஜாரில் சிசிடிவி பழுதால் குற்றங்கள் அதிகரிப்பு: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: