சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் 11-வது முறையாக சிபிஐ வாய்தா கேட்டது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குட்கா வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர் ரவி தாமதத்தால் குட்கா ஊழல் வழக்கு விசாரணை முடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதத்தால் நீதிமன்றத்தில் சிபிஐ வாய்தா கோரியது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்தாண்டு முதல் சிபிஐ அனுமதி கோரி வருகிறது. ஆளுநர் ரவி அனுமதி தராததால் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதிய பிறகும் ஆளுநர் ரவி அனுமதி தர மறுத்து வருகிறார்.
The post குட்கா வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் 11-வது முறையாக வாய்தா கேட்கும் சிபிஐ appeared first on Dinakaran.