×

“அட்டை பெட்டியில் குழந்தை; சுகாதாரத்துறையின் தவறு இல்லை”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

The post “அட்டை பெட்டியில் குழந்தை; சுகாதாரத்துறையின் தவறு இல்லை”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,CHENNAI ,Killipakkam ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய...