×

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு டெப்போவில் மரம் முறிந்து விழுந்து பஸ்,5 பைக்குகள் சேதம்


நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தின் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனை வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் ஒன்று நேற்று மாலை திடீரென முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் நின்ற அரசு விரைவு பஸ்சின் கண்ணாடி உடைந்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 பைக்குகளும் சேதம் அடைந்தன.

வழக்கமாக மரத்தின் நிழலில் தொழிலாளர்கள் அமர்ந்து பேசுவது வழக்கம். அதிர்ஷ்டவசமாக நேற்று மரம் முறிந்து விழுந்த சமயத்தில் யாரும் இல்லாததால், எந்த வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை. மரம் முறிந்து விழுந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சென்று உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர்.

The post நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு டெப்போவில் மரம் முறிந்து விழுந்து பஸ்,5 பைக்குகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Meenakshipuram government depot ,Nagercoil ,Government Express Transport Corporation ,Meenakshipuram Anna Bus Stand ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்