- மம்தா
- நிதி ஆயோக்
- கொல்கத்தா
- யூனியன்
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- மக்களவை
- யூனியன் பட்ஜெட்
- தின மலர்
கொல்கத்தா: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தேஜ கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஒன்றிய பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பின.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட்,டெல்லி, பஞ்சாப், கேரள முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை ஒரு நாள் ஒத்தி வைத்துள்ளார் .இதனால் அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
* பஞ்சாப் முதல்வர் புறக்கணிப்பு
ஜலந்தரில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ‘‘ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பஞ்சாப் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவேதான் அனைத்து முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.
The post பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிக்க மம்தா முடிவு? appeared first on Dinakaran.