செங்கல்பட்டு: அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா மைதா கைது செய்யப்பட்டார். கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக அரசு மருத்துவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.