தந்தையை காப்பாற்ற திருடிய சிறுவன் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்போன் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுவன் ஒருவன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனை போலீசார் மடக்கி, பிடித்து விசாரித்தனர்.

அதில், திருவள்ளூர் அடுத்த செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவன் என்பதும், கை, கால்கள் இயங்காத நிலையில், உடல் நலம் பாதித்த அப்பாவை காப்பாற்ற 9ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடி அலைந்ததும், வேலை ஏதும் கிடைக்காததால் அப்பாவை காப்பாற்ற கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்தும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் தூங்கும்போது, அவர்களது செல்போன், பணத்தை திருயததும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார், கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அவனை அடைத்தனர்.

The post தந்தையை காப்பாற்ற திருடிய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: