பாஜகவில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் தருகிறார்கள்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: பாஜகவில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் தருகிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலம் தனக்கு பாஜக அழுத்தம் தருவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

பாஜகவில் சேரப்போவதில்லை:

பாஜகவுடன் ஒருபோதும் சேரப்போவதில்லை என டெல்லி அமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்:

ஒன்றிய பாஜக அரசு எங்களுக்கு எதிராக சதி செய்ய முயன்றாலும் நான் அடிபணிய மாட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபட தெரிவித்தார்.

பாஜக மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு:

பள்ளி, மருத்துவமனைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில் 4% மட்டுமே செலவு செய்கிறது. ஆனால் டெல்லி அரசு ஒவ்வோர் ஆண்டும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் 40% செலவு செய்கிறது. ஒன்றிய அரசின் அனைத்து விசாரணை அமைப்புகளும் இன்று எங்களை பின்தொடர்ந்து வருகின்றன. ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.25 கோடி பேரம் பேசியதாக கெஜ்ரிவால் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

The post பாஜகவில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் தருகிறார்கள்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: