அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே கோயில் நிலத்தை கிரயம் செய்த பாஜ எம்எல்ஏக்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

கடலூர்: அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே கோயில் நிலத்தை 2 பாஜ எம்எல்ஏ மோசடியாக கிரயம் செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமத்தில் ஆளுநர் நேரடியாக வந்து தலித் மக்களுக்கு பூணூல் அணிவித்தது கேவலமான செயல். ஆதனூரில் பிறந்த ஊரில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கு பூணூல் அணிவிப்பது பூணூலை புனித படுத்துவதும், மனுவாத கருத்துகளை நியாயப்படுத்தக் கூடிய மோசமான செயல்.

மீண்டும் ஒருமுறை நந்தனாரை தீயிட்டு கொளுத்தியதுபோல் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆளுநர் ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். அவர் சனாதனத்தையும், புரிந்து கொள்ளவில்லை வள்ளலாரையும் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு ஆர்எஸ்எஸ் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்டது.

புதுச்சேரியில் அரசின் கட்டுப்பாட்டில் கோயில் நிலங்கள் இருக்கும்போதே, காமாட்சி அம்மன் கோயிலுடைய நிலத்தை இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் மோசடியாக கிரயம் செய்துள்ளார்கள். நாடு முழுவதும் மத மோதல்களை உருவாக்குவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ரெய்டு நடத்துவது, கைது செய்வது போன்ற செயலில் பாஜ ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே கோயில் நிலத்தை கிரயம் செய்த பாஜ எம்எல்ஏக்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: