×

பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை; அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசினால் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: கடந்த சில நாட்களாக அதிமுக-பாஜக இடையே மோதல் அதிகரித்துவரும் நிலையில், இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் மறைந்த தலைவர்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது ஏற்கெனவே அதிமுக-பாஜக இடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில், சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்தது இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் போக்கை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:
“எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன். கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாஜக உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும் என்று கூறினார்.

The post பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை; அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசினால் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Annamalai ,Former Minister ,Jayakumar ,Chennai ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...