×

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் பண மோசடி: பாஜக நிர்வாகி மீது புகார்

திருச்சி: வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி மீது புகார் எழுந்துள்ளது. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளர் பாலன் மீது மதியழகன் என்பவர் புகார் அளித்துள்ளார். 2வது மனைவி கொலை வழக்கில் கைதான பாலன் மீது கூலித் தொழிலாளி மதியழகன் புகார் அளித்துள்ளார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 தவணைகளாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

The post வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் பண மோசடி: பாஜக நிர்வாகி மீது புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy ,Mathiyazhagan ,Wing ,State ,Balan ,Dinakaran ,
× RELATED வீட்டில் டிவி பார்க்கும்போது தகராறு:...