பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கடந்த மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சமீபத்திய சாதிவாரி கணக்கெடுப்பின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளின் துணைக்குழு உள்ளிட்ட ஓபிசி பிரிவினர் மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்கள்தொகையில் 63% உள்ளனர்.
அதே நேரம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 21%-க்கும் சற்று கூடுதலாக உள்ளனர். இதன் அடிப்படையில், தற்போது 17% ஆக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களின் இடஒதுக்கீடு 22% ஆக உயர்த்தப்படும். அதே போன்று, தற்போது 50% ஆக இருக்கும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்படும். தகுந்த பரிசீலனைக்கு பிறகு தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என தெரிவிக்கபட்டது.
* தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 16%-ல் இருந்து 20%-ஆக உயர்கிறது.
* பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 1%-ல் இருந்து 2%-ஆக உயர்கிறது.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43-% ஆக அதிகரித்துள்ளது.
* உயர் சாதி ஏழைகளுக்கான 10%-ஐ சேர்த்தால் மொத்த இடஒதுக்கீடு 75%-ஆக அதிகரிக்கபட்டது.
The post பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 75% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது appeared first on Dinakaran.